'இது என்னடா டிசைன் டிசைனா பரவுது'... 'இங்கு மட்டும் மாறுபட்ட கொரோனா வைரஸ்'... கெட்டதிலும் இருக்கும் நன்மை!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் தற்போது கேட்கும் ஒரே சொல் கொரோனா. கிட்டத்தட்ட எந்த நாட்டையும் இது விட்டுவைக்கவே இல்லை என்று சொல்லும் அளவிற்கும் பல நாடுகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதற்கிடையே தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் சுமார் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
இதனிடையே இந்தோனேசிய அரசு தற்போது வெளியிட்டுள்ள தகவல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், மற்ற உலக நாடுகளில் பரவி வரும் வைரசிடமிருந்து மாறுபட்டு இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் பரவி வரும் கொரோனா வைரசின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 3 விதமாக கொரோனா வைரஸ் உருமாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாம்பங் பிராட்ஜாங்கொரோ கூறியுள்ளார். இந்தோனேசியாவிலிருந்து ஆய்வுக்கு அனுப்பப்பட்ட வைரசின் மாதிரிகள் இதுவரை கண்டறியப்படாத வகைகளில் ஒன்றாகும்.
ஆனால் கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, இந்த வைரசின் உருமாற்றம் என்பது, தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிகரமாக அமையும் என இந்தோனேசிய அரசு கூறியுள்ளது.