'வச்ச குறி தப்பாது... ஏன்னா... பார்வைலயே 'ஷாக்' அடிக்குது!'.. செம்ம கெத்தான நீல நிறக் கண்களுடன்... யார் இவர்கள்?.. வியப்பூட்டும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் 42 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மரபணு பிறழ்வுகளால் ஏற்படும் வார்டன்பர்க் சின்ட்ரோம் இது. அதன் விளைவாக கண்கள் மின்சாரம் பாயந்ததுபோல நீலநிற நிறமாக ஒளிரும்.

இந்தோனேசியாவில் உள்ள பட்டன் தீவில் வாழும் பழங்குடி மக்களிடம் நீல நிறக் கண்கள் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
நீலநிறக் கண்கள் கொண்ட மனிதர்களை படம்பிடித்துள்ளார் புகைப்படக் கலைஞர் கோர்ச்சனாய் பசாரிபு. இந்த நோய் பாதிப்பின் காரணமாக செவிப்புலன் இழப்பு மற்றும் நிறமி இல்லாமை ஏற்படுகிறது.
அதனால் வெளிர் நீலம், நீலம், கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் கண்கள் காணப்படும். வார்டன்பர்க் சின்ட்ரோம் மரபணுக்களின் பிறழ்வுகள் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
பட்டன் தீவுக்குச் சென்று நீலநிறக் கண்கள் கொண்ட பழங்குடியினரை வித்தியாசமான உடைகள் மற்றும் தோற்றங்களில் அழகியல் உணர்வுடன் சிறந்த படங்களை எடுத்துள்ளார், புவியியல் நிபுணரான புகைப்படக் கலைஞர் கோர்ச்சனாய் பசாரிபு.

மற்ற செய்திகள்
