'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஜாவா நகரில் வழங்கப்படும் நூதன தண்டனையால் மக்களிடையே மாஸ்க் அணிவது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்களுக்கு நூதன தண்டனையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறை தோண்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மாவட்ட தலைவர், "கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய குழிகள் தோண்ட எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் மாஸ்க் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் எனத் திட்டமிட்டேன்.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மாஸ்க் அணிவது மிகவும் கட்டாயம். எனவே இந்த தண்டனை விதிமீறல்களுக்கு எதிரான ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜாவா நகரில் வழங்கப்பட்ட இந்த தண்டனைக்குப் பிறகு மக்கள் மத்தியில் மாஸ்க் அணிவது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
