“இறுதிச் சடங்கில் சடலத்தை குளிப்பாட்டும்போது கண்விழித்த சிறுமி!”.. உறைந்துபோன உறவினர்கள்.. அடுத்த 1 மணி நேரம் கழித்து நடந்த இன்னொரு அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமிக்கு இறுதிச்சடங்கின்போது உயிர் வந்து எழுந்து மீண்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் siti masfufah wardah என்கிற 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழவு மற்றும் வேறு சில உடல்நலக் கோளாறுகள் காரணாமாக கடந்த 18-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அன்று மாலையே சிகிச்சைப்பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, சிறுமியின் வீட்டார் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
இறுதிச் சடங்கில் சிறுமியின் உடலில் தண்ணீர் ஊற்றி அவரது குடும்பத்தினர் குளிப்பாட்டியுள்ளனர். அப்போது சிறுமி தீடீரென கண் விழித்ததுடன், சிறுமியின் இதயம் துடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமிக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி மீண்டும் 1 மணி நேரத்தில் உயிரிழந்தார். இதுபற்றி பேசிய மருத்துவர்கள், sitikகு இப்படி நடந்ததற்கு காரணம் ஹைபர்கேமியா என்றும் உடலில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கும்போது இப்படி நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
