'கொரோனா வைரசிற்கும்...' 'நியாண்டர்தல்களுக்கு இடையே உள்ள தொடர்பு...' - ஆய்வில் வெளிவந்துள்ள ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை கட்டுப்படுத்தும் வீரியம் மிக்க டி.என்.ஏ லட்சம் வருடம் முன்பு வாழ்ந்த நியாண்டர்தல்களின் டி.என்.ஏ-வில் உள்ளதென ஆய்வு ஒன்றில் கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை அதிகார பூர்வமான மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகிறது.
அதில் ஒன்றாக மனித இனம் உருவாதற்கு முன் உலகில் வாழ்ந்த மனிதனின் சதோதர இனம் என்று அழைக்கப்படும் நியாண்டர்தல்களின் மரபணுவுக்கும் தற்பொழுதுள்ள கொரோனா தொற்றுக்குமான ரகசியம் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது நியாண்டர்தல்களின் டி.என்.ஏவில் கொரோனா தொற்றின் பாதிப்பை 22 சதவீதம் வரை குறைக்கும் திறன் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இம்மாதிரியான நியாண்டர்தல்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் என கூறும் ஆராய்ச்சியாளர்கள், அந்த பகுதிகளை சேர்ந்த வம்சாவளியினரிடம் 2% சதவீதம் நியாண்டர்தல்களின் டி.என்.ஏ.வின் தாக்கம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் உறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதிகளை சேர்ந்த 2,200 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டதில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் மரபணு தொகுதி அவர்களது உடலில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் ஆதிமனிதனின் ஆற்றல் மிகுந்த மரபணு தற்காலத்தில் உள்ள மனித இனத்தின் பாதுகாப்பிற்கு உதவுகிறது என்ற ஆய்வு ஆராய்ச்சியாளர்களின் நம்ப முடியாத அதிசயமாக உள்ளது.

மற்ற செய்திகள்
