தாயைக் காப்பாற்ற பாடிய 'சிறுமி'... 'பார்த்தபடியே' உயிரிழந்த தாய்...மேடையிலேயே 'கதறி' அழுத சிறுமி...நேரலையில் நிகழ்ந்த 'நெகிழ்ச்சி' சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 26, 2020 09:30 AM

இந்தோனேசியாவில் தாயின் மருத்துவச் செலவுகளுக்காக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வென்ற சிறுமியை, நேரலையில் பார்த்தபடியே அவரது தாய் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. அந்த உருக்கமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

A girl who won a singing competition to save her mother

இந்தோனேசியாவில் லிகா தங்தத் (Liga Dangdut)  என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு 26 லட்சம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த ஜன்னா (Siti Nur Jannah Rumasukun) என்ற 14 வயது சிறுமி ஒருவர், உயிருக்குப் போராடும் தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக போட்டியில் பங்கேற்றார். தனது தாயை நினைத்தபடியே உருக்கமாகப் பாடி அனைவரையும் அசத்தினார். அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜன்னா அதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார்.

அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதியான தகவல் மேடையில் அறிவிக்கப்பட்ட போது, இந்த மகிழ்ச்சியான தகவலை தனது தாயிடம் ஜன்னா போனில் கூறினார். இதையடுத்து இறுதி போட்டிக்கான பாடலை மிக உருக்கமுடன் பாடினார். அவரது பாடலை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஜன்னாவின் தாய் நெகிழ்ந்து போய் கண்ணீருடன் கேட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.

இந்தத் தகவலைக் கேட்ட அந்தச் சிறுமி மேடையிலேயே கதறி அழுதார். இதனைக் கண்டு அரங்கில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர். நேரலையில் டிவி.,யில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் இது சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Tags : #INDONESIA #JANNAH #SINGING COMPETITION #LIGA DANGDUT