கஸ்டமருக்கு 'மருந்து' எடுத்து கொடுத்திட்டு இருந்தேன்...! 'அப்போ தாலிபான்கள் மெடிக்கல் ஷாப் உள்ள நுழைஞ்சு...' - துப்பாக்கி முனையில் 'இந்திய' வம்சாவளிக்கு நேர்ந்த கொடுமை...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான்கள் (Talibans) ஆட்சி அமைக்கவிருக்கும் நிலையில் அங்கிருக்கும் பெரும்பாலான மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறி வந்தனர். மேலும், அங்கிருக்கும் பெண்கள், முன்னாள் அரசுத்துறை ஊழியர்கள், ராணுவத்தினர், ஆப்கான் அல்லாதவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பன்சிரி லால் அரெண்டே (Bansri Lal Arendeh) என்பவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் 50 வயதான பன்சிரி லால் அரெண்டே, காபுலின் 11-வது போலீஸ் மாவட்டத்தில் மருந்துக் கடை நடத்தி வருகிறார். நேற்று (14-09-2021) இரவு சுமார் 8 மணியளவில் பன்சிரி லால் தன் கடை ஊழியர்களுடன் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த போது, துப்பாக்கிகளுடன் வந்த சிலர் பன்சிரி லால் மற்றும் அவரின் கடை ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
அதன்பின், பன்சிரி லாலை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாகவும் அங்கிருந்த கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட பன்சிரி லாலின் குடும்பத்தினர் டெல்லி (Delhi) அருகேயுள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தேடுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
