'இத ரொம்ப ஈஸியா நினைக்காதீங்க'!.. உலக அரசியல் கணக்குகளை மாற்றிவரும் தாலிபான்கள்!.. ஆப்கான் குறித்து 'ஷாக்' அடிக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் எழுச்சி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்துலாக மாறியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்திருப்பது, இங்கிலாந்தில் உள்ள பயங்கரவாதிகளை தைரியப்படுத்த வாய்ப்புள்ளது என MI5 இன் இயக்குனர் ஜெனரல் கென் மெக்கலம் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரே இரவில் மாறாது என்றாலும், தீவிரவாதிகளுக்கு மன உறுதியை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் பயங்கரவாதத்தால் ஈர்க்கப்படுவது அதிகரிக்கும் போது நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
மேலும், இங்கிலாந்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 31 தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் மெக்கலம் கூறினார். தொற்றுநோய் காலத்தில் மட்டும் ஆறு தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவை பெரும்பாலும் மதத் தீவிரவாத சதித்திட்டங்களாக இருந்தாலும், தீவிர வலதுசாரி பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்ட பெருகிவரும் தாக்குதல்களும் இருந்தன என்றார்.
மேலும், இங்கிலாந்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல், ஒரு உண்மையான மற்றும் நீடித்த விஷயம் என்று நான் வருந்துகிறேன், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரிகளாக விளங்கும் நாடுகளுடன் அவர்கள் நட்பு பாராட்டி வரும் நிலையில், இங்கிலாந்து பாதுகாப்பு அதிகாரியின் இந்த கருத்து ஆசிய கண்டத்தில் பல வரலாற்று திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
