'கருத்து சுதந்திரமாவது... மண்ணாங்கட்டியாவது'!.. மந்திரி சபை லிஸ்ட் ரெடியானதும்... தாலிபான்கள் அட்டூழியம்!.. பரிதாபமான நிலையில் 5 பத்திரிகையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப் போகும் தாலிபான்கள் தடாலடியாக 5 ஆப்கான் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, கடந்த 15ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் வசம் சென்றது.
இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.
இதற்கிடையே, தாலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர். பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலையின்றி தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இடைக்கால மந்திரிசபையையும் , இடைக்கால பிரதமரையும் தலீபான்கள் அறிவித்து உள்ளனர்.
மேலும், தற்போது முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும், கொலை செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், இடைக்கால அரசின் பிரதமரை நேற்று அறிவித்த நிலையில், இன்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தாலிபான்கள் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
