ஐயோ 'அவரா' உள்துறை அமைச்சர்...!? ஒருகாலத்துல 'என்னெல்லாம்' பண்ணிருக்காரு...! '2008-ல் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு...' - 'அதிர' வைக்கும் பல தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் சிராஜுதீன் ஹக்கானி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இவர் 'ஹக்கானி' எனப்படும் குழுவை சேர்ந்தவர். இந்த ஹக்கானி குழு பாகிஸ்தான் நாட்டிற்கு நெருக்கமான தாலிபான் பிரிவு ஆகும். இந்த குழுவின் இரண்டாம் கட்ட தலைவரான சிராஜுதீன் ஹக்கானிதான் ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார். சர்வதேச அளவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகள் இவரை வலைவீசி தேடி வருகிறது.
இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு அல்லது இவரின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 36 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என்று அமெரிக்கா 2008-ஆம் ஆண்டு அறிவித்தது. 2008-ஆம் ஆண்டு காபூலில் ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் மொத்தம் ஆறு பேர் மரணமடைந்தனர்.
இதில் சிராஜுதீன் ஹக்கானி தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதோடு, ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஹாமித் கார்சாயை 2008-ஆம் ஆண்டு இவர் குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் ஹாமித் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார்.
எனவே, அமெரிக்காவின் FBI, CIA உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றங்களுக்காக இவரை தீவிரமாக தேடி வந்தது. அதன் தொடர்ச்சியாக, பென்டகன் இவரின் தலைக்கு 36 கோடி ரூபாய் பரிசுத் தொகை என அறிவித்தது.
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஆப்கான் தாலிபான் ஒருவர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் உள்துறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டு இருப்பது தான் அதிர்ச்சியடைய செய்துள்ளது.