'அடேங்கப்பா!.. பெண்கள் மீது என்ன ஒரு கரிசனம்'!.. 'பாவப்பட்டு பேசுவது போல்... பெண்களை மிக மோசமாக மட்டம் தட்டிய தாலிபான்கள்'!.. பூதாகரமான சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் பெண்கள் அரசியல் குறித்து தாலிபான்கள் தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களின் முந்தைய ஆட்சியைப் போலவே, பெண்களின் உரிமைகள் மறுக்கபட்டு வருகிறது. தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் யாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
மேலும், விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. இதனால், தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் மந்திரிகளாக முடியாது என தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி (Sayed Zekrullah Hashimi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சையது கூறியதாவது, "பெண்கள் மந்திரிகளாக முடியாது. மந்திரியாவது என்பது பெண்களுக்கு அவர்களின் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும்.
பெண்கள் மந்திரி சபையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.
அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு சரிபாதி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வரும் சூழலில், பெண்களின் வேலை குழந்தை பெற்றெடுப்பது தான் என்றும், மந்திரி சபையில் பெண்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தாலிபான்கள் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மற்ற செய்திகள்
