குடைச்சல் கொடுத்த பஞ்ச்ஷீர் மாகாணம்!.. எதிரிகள் தகர்க்கப்பட்டது எப்படி?.. சைலண்ட்டாக வந்த உதவி!.. கச்சிதமாக முடித்த தாலிபான்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை கைப்பற்றிய தாலிபான்கள் எஞ்சியிருந்த பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் வெல்ல அவர்களுக்கு உதவியது யார் என்ற திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.
![panjshir resistance commander confirm pakistan helping taliban panjshir resistance commander confirm pakistan helping taliban](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/panjshir-resistance-commander-confirm-pakistan-helping-taliban.jpg)
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
ஆனால், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகள் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை. மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் கெரில்லா படை தளபதி அகமத் ஷா மசூத்தின் மகன் அகமத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ் ஆகியோரின் தலைமையிலான தேசிய எதிர்ப்பு படையின் கோட்டையாக பஞ்ச்ஷீர் இருந்தது.
தாலிபான்களுக்கும் எதிர்ப்பு படையினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து பஞ்ச்ஷீரில் இரு தரப்பினருக்கும் மோதல் நடைபெற்று வருகிறது.
JUST IN 🚨 Taliban hoisted flag at Panjshir Governor House after taking control of the last province that was under rule of anti-Taliban forces in Afghanistan
— Insider Paper (@TheInsiderPaper) September 6, 2021
இதற்கிடையே, திங்கட்கிழமை ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணமும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். பஞ்ச்ஷீர் ஆளுநர் இல்லத்தில் தாலிபான்கள், அவர்களது கொடியை ஏற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தான், பாகிஸ்தான் விமானப்படை உதவியுடன் தாலிபான்கள் பஞ்ச்ஷீரை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)