'நெஞ்சுல ரணம், கண்ணுல கண்ணீரோட...' வெளியான 'ஆப்கான் சாட்டிலைட்' புகைப்படம்...! - எதிரிக்கு கூட 'இப்படி' ஒரு நிலைமை வரக் கூடாது...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியவுடன் அந்நாட்டு மக்கள் கெடுபிடி நிறைந்த ஆட்சிக்குப் பயந்து அந்நாட்டை விட்டு வெளியேற துவங்கினர்.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற அந்நாட்டு மக்களுக்கு கடந்த 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
பெரும்பாலான ஊடகங்கள் அனைத்தும் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் காத்திருந்தது குறித்து தான் செய்திகள் வெளியிட்டிருந்தனர். ஆனால், வான்வழி மட்டுமல்லாது தரைவழியாகவும் மக்கள் ஆப்கானை விட்டு வெளியேற காத்திருந்தனர்.
ஆப்கானிஸ்தான் தனது எல்லைகளை பாகிஸ்தானை ஒட்டிய சம்மன் எல்லையிலும், தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஷிர்கான் பகுதியிலும், ஈரானை ஒட்டிய இஸ்லாம் காலா எல்லையிலும் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களிலும் பெரும்பாலான மக்கள் வெளியேற காத்துக் கொண்டிருந்துள்ளனர்.
அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் மக்களின் வேதனையை ஒரு செயற்கைக் கோள் புகைப்படம் ஆவணப்படுத்தியுள்ளது. இந்த செயற்கைக் கோள் புகைப்படம் செப்டம்பர் 6-ஆம் தேதி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மட்டும் ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 1,24,000 பேரை மீட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி உறுதி செய்யப்பட்டாலும் இன்னும் அங்கு அமைச்சரகங்களின் அலுவலகங்கள் மூடியுள்ளன. மக்கள் வேலைவாய்ப்பின்மையாலும், பணமின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.