'பொண்ணுங்கள விளையாட விட்டா... 'அந்த' சிக்கல் வரும்'!.. சர்ச்சையான கருத்தைக் கூறி... கேவலப்பட்டுப் போன தாலிபான்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தாலிபான் அமைப்பு, பெண்கள் விளையாட்டுகள் குறித்து வெளிப்படுத்தியுள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான் அமைப்பின் பழமைவாதக் கொள்கைகளால் அந்நாட்டில் பல தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கு விளையாட அனுமதி இல்லை என்று தாலிபான்கள் தெரிவித்திருப்பதும், அதற்கான காரணமும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து தாலிபானின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக் (Ahmadullah Wasiq) ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, "பெண்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அவசியமில்லை என்பதால் பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
கிரிக்கெட்டில், அவர்கள் முகம் மற்றும் உடல் மறைக்கப்படாத சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். பெண்களை இப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இது ஊடக யுகம். பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். பின்னர், மக்கள் அதைப் பார்ப்பார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதன் காரணமாக, இஸ்லாமும், இஸ்லாமிய எமிரேட்டும் பெண்கள் கிரிக்கெட் விளையாடவோ அல்லது அவர்கள் உடல் வெளிப்படும் விதமான விளையாட்டுகளை விளையாடவோ அனுமதிக்காது" என்று கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில், பெண்களின் ஆடை கட்டுப்பட்டுக்காக பெண்களை விளையாடவே அனுமதிக்கக் கூடாது என தாலிபான்கள் அறிவித்திருப்பது பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
