'முதல் முறையா சறுக்கிய முகேஷ் அம்பானியின் மெகா பிளான்'... 'கிடைச்ச கேப்பில் சொல்லி அடித்த ஏர்டெல்'... இவ்வளவு கம்மி விலையில் ஸ்மார்ட்போனா?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் அறிமுகமாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
முகேஷ் அம்பானி ஏற்கனவே டெலிகாம் துறையில் தனது ஜியோ நிறுவனம் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மலிவு விலையில் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை உருவாக்கியது. ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற 4ஜி ஸ்மார்ட்போனை விநாயகர் சதுர்த்திப் பண்டிகையின் போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டார்.
ஆனால் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கான சிப் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் போதிய அளவிலான இருப்பு இல்லாத காரணத்தால் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடியாமல் போனது இந்நிலையில் ஜியோ-வின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் திட்டத்திற்குப் போட்டியாக ஏர்டெல் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இது ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் கனவிற்குப் பின்னடைவாக அமைய வாய்ப்பு உள்ளது.
ஏர்டெல், ஜியோ நிறுவனத்தைப் போலவே பியூச்சர் போன் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய போன்களை அறிமுகம் செய்யாமல் ஏற்கனவே சந்தையில் இருக்கும் போன் பிராண்டுகள் உடன் குறிப்பாக மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பிராண்டுகள் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
இந்த மாபெரும் திட்டத்திற்காகச் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை சந்தையை வைத்திருக்கும் லாவா, கார்பன் மற்றும் HMD ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன்மூலம் இந்தியாவில் சுமார் 12 கோடி 2ஜி வாடிக்கையாளர்களைத் தனது 4ஜி சேவை தளத்திற்குள் இணைக்க முடியும் என ஏர்டெல் நம்புகிறது. எனவே யார் முதலில் மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப் போகிறார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.