"இதற்கு தோனிதான் காரணம் ஏன்னா நான் அவருடைய ரசிகன்”!.... புகழும் உலக பிரபலம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | May 03, 2019 05:08 PM
நான் தோனியின் வழியை பின்பற்றுவேன் என்று ஐநாவின் இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 40 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ அகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்த இந்த அமைப்பின் முகாம்கள் மீது இந்திய ரானுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
இதையடுத்து, ஜெய்ஷ் இ அகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐநாவில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற தடையாக சீனா இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சீனாவின் ஒப்புதலோடு மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவித்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவர முக்கிய மூளையாக இருந்தவர் ஐநாவின் இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன். இதனையடுத்து, பேசிய இந்திய பிரதிநிதி தான் தோனி வழியை பின்பற்றி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாத பட்டியலில் சேர்ததாக அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும், “தான் தோனியின் ரசிகன் என்றும், அவரது கருத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் எப்போதும் நிறைய நேரம் இருக்கிறது என்று நினையுங்கள். உங்களது இலக்கை முழுமையாக அடைய நினையுங்கள். மேலும், நேரம் முடிந்ததாக நினைத்து முன்கூட்டியே முயற்சியை கைவிடாதீர்கள் என்ற தோனியின் வழியை பின்பற்றி வென்றேன்” என்று கூறியுள்ளார்.