’பட்டையைக் கிளப்புவோம்ல’ .. CSK வுக்காக பிராவோ பாடிய ‘சாம்பியன்’ பாடல்! .. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 03, 2019 01:56 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னைக்கும் தமிழகத்துக்கும் எப்போதும் நெருக்கமான அணியாக உள்ளதாலேயே இந்த அணிக்கு அதிக ஆதரளவாளர்கள் குவிகின்றனர் எனலாம்.

Watch:Bravo\'s Champion Song, A sweetest tribute to CSK goes viral

கிரிக்கெட் தொடரை சீரியஸாக போட்டி நேரங்களில் மட்டும் விளையாடுவதைத் தாண்டி, அவ்வப்போது சில ஃபன் தருணங்களை உண்டாக்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனித்துவமான கவனத்தை  ரசிகர்களிடையே பெறுகிறது. கேப்டன் தோனி கிரவுண்டில் ஓடிப்பிடித்து விளையாடுவது தொடங்கி, அணியில் அனைவருமே சிறப்பான மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் வீரர்களாகவே இருக்கின்றனர்.

அதிலும் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடல்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் போடு என்ற ஆரம்ப கால பாடல், அதோடு தோனியை, ‘தல’ என்றழைத்த பாடல் என எல்லாமே பிரபலமானவையாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்தன.

அந்த வகையில் சிஎஸ்கே -வின் முக்கிய வீரராக விளையாடும் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த பிராவோ தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடியுள்ள சாம்பியன் பாடல் பட்டையை கிளப்பிக்கொண்டு வருகிறது. ‘யெல்லோவ் டே’ என்கிற பெயரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஒரு ட்ரிபியூட் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலை அந்த அணி நிர்வாகம் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது.