'ட்விட்டர் அக்கவுண்ட் அட்மின் ஆக யாருக்கு வாய்ப்பு...' 'பிரதமர் மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ட்வீட்...' இது மகளிர் தின ஸ்பெஷல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 03, 2020 03:19 PM

தனது ட்விட்டர் பக்கத்தை பெண் ஒருவர் நிர்வகிக்க வாய்ப்பு வழங்க போவதாக பிரதமர் மோடி தற்போது டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

A woman manages her Twitter account on Women\'s Day

சமூக வலைத்தளப் பயன்பாட்டில் இருந்து வெளியேற இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இதற்கு பல விமர்சனங்கள் வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில்  இருந்து மோடி வெளியேற வேண்டாம் என பலர் கருத்து பதிவிட்டு வந்தனர். '#NoSir', '#nomodinotwitter' என்ற ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதன்படி, வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று தனது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களை பெண்கள் நிர்வகிக்கலாம். வாழ்க்கை மற்றும் பணியின் மூலமாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் பெண்களிடம் சமூக வலைத்தளப் பக்கங்களை ஒப்படைக்கத் தயார் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்காக சாதனைப் பெண்கள் தங்களது விபரங்களை எழுத்து மூலமாகவோ, விடியோ பதிவு மூலமாகவோ #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் பதிவிட வேண்டும். அதன்பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு மோடியின் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளை பதிவிடும் வாய்ப்புகள் வழங்கப்படும். இது பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : #MODI