'கிம் ஜாங் உன்' பூரண நலம் பெற 'வாழ்த்துகிறேன்...' 'ஆரோக்கியத்துடன்' இருக்கிறார் என 'நம்புகிறேன்...' "வாழ்த்து கூறியவர் யார் தெரியுமா...!"
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியா அதிபர் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னுக்கு சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை பளு காரணமாக, கிம்முக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு, கடந்த, 12ம் தேதி, ஹியாங்சன் கவுண்டி என்ற இடத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளியானது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கிம் ஜாங் உன்னின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளி மாளிகையில் அளித்த பேட்டியில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடன், அமெரிக்கா இதுவரை நல்ல நட்புறவை தொடர்கிறது. அவரது உடல் நலம் பற்றிய செய்திகள் எப்படி வெளிவந்தாலும், அவர் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்பதை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என நான் நம்புகிறேன்", என்று கூறினார்.
