"எய்ட்ஸ், அல்சைமர், ஆட்டிசம், கேன்சர் மற்றும் கொரோனா..." "சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து..." 'நம்ம ஊர்ல மட்டும் இல்ல...' 'அமெரிக்காவுலயும் இருக்காங்க போல...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' எனக் கூறி விற்பனை செய்யப்பட்ட மருந்துக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சர்ச் ஒன்றில், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' எனக் கூறி ரசாயன கலவையை, கெமிக்கல் ஏஜெண்ட் ஒருவர் விற்பனை செய்து வந்தார். இதுதொடர்பாக விற்பனை ஏஜென்ட் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் அதனை விற்க உடனடியாக தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையில், எம்.எம்.எஸ்.,(Miracle Mineral Solution) எனப்படும் அந்த 'அற்புத மருந்து' கொரோனாவை குணப்படுத்தும் எனவும், அல்சைமர், ஆட்டிசம், கேன்சர் மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட தீர்க்க முடியாத வியாதிகளையும் குணமாக்கும் என வாதிடப்பட்டது.
விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், எம்.எம்.எஸ்., ஒரு கெமிக்கல் தயாரிப்பு என்றும், இதனால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் ஏற்படும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இம்மருந்து விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.