ட்விட்டர் ஊழியர்களுக்கு வந்த மெயில்.. அடுத்த வாரம் எலான் மஸ்க் செய்ய இருக்கும் சம்பவம்?.. முழு விபரம்.!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களை அடுத்த வாரம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
இப்போதைக்கு வாங்கல
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து போலி கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை
இந்நிலையில், அடுத்தவாரம் ட்விட்டர் நிறுவன ஊழியர்களை எலான் மஸ்க் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களை சந்திக்க இருப்பதாகவும், ஊழியர்களின் நேரடி கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் அறிவித்ததற்கு பிறகு நடைபெற இருக்கும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பதால் உலகம் முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | கனவுல கூட இந்த தீவுக்கு போய்டவே கூடாது.. மனுஷங்களே கிடையாது.. கால் வைக்குற இடமெல்லாம் பாம்புதானாம்..!

மற்ற செய்திகள்
