"BEDROOM கூட தனி தனி.." வீட்டையே பிரிச்சு வாழும் கணவன், மனைவி.. "எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு விஷயம்தான்.."
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் Wetherby என்னும் பகுதியை சேர்ந்தவர் கிளயர். இவரது கணவர் பெயர் டேவிட். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தம்பதியருக்கு 13 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
டேவிட் மற்றும் கிளயர் ஆகிய இருவருமே, தனிப்பட்ட காரணங்களால், கடந்த 20 ஆண்டுகளாக வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், தங்களின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின்னர், இருவரும் ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்துள்ளனர். அப்போது தான், இருவருக்கும் இடையே பிரச்சனைகள் தொடங்கியதாக கிளயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசும் கிளயர், "20 ஆண்டுகள் நாங்கள் தனித்தனியாக இருந்த போது, எங்களது திருமண வாழ்க்கை சிறப்பாக இருந்தது. ஆனால் ஒரே வீட்டில் நாங்கள் இணைந்து தங்க ஆரம்பித்த பிறகு தான் சிக்கலே ஆரம்பித்தது. ஏனென்றால், நான் எப்போதும் என்னை சுற்றி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், எனது கணவர் டேவிட் அழுக்கு துணிகளை தூக்கி எங்காவது வீசுவது, டைனிங் டேபிளில் தேவையில்லாத பொருட்களை வைப்பது என தன்னை சுற்றி உள்ள பகுதியை எப்போதுமே அசுத்தமாக வைத்திருப்பார். இது எங்களுக்குள் நிறைய பிரச்சனையை ஏற்படுத்தியது. இறுதியில், அவர் இப்படித்தான் என நானும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்து அதன்படி நடந்தேன்" என கிளயர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக, ஒரே வீட்டில் அவர்கள் தங்கி வரும் நிலையில், தற்போது அதே வீட்டினை தனித்தனியாக பிரித்து இருவரும் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கிளயர் மற்றும் டேவிட் ஆகிய இருவருக்கும் தனித்தனி படுக்கை அறையும் ஒரே வீட்டில் உள்ளது. அதே போல, தொலைக்காட்சியை பார்ப்பதை கூட வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக தான் பார்த்து வருகின்றனர்.
ஆனால், அதே வேளையில் நாள் முழுவதும் இருவரும் தனித்தனியாக அனைத்து வேலைகளை செய்து வந்தாலும் இரவு நேரம் டின்னருக்கு பிறகு ஒரு 15 நிமிடமாவது இருவரும் ஒன்றாக இருந்து பேசுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டை அவர்கள் பிரித்து வாழ்ந்து வந்தாலும் இருவருக்கு இடையில் உள்ள அன்பில் எந்த ஒரு குறையும் இல்லை என்றும், இந்த வினோத தம்பதியினர் குறிப்பிடுகின்றனர்.
இவர்களின் வாழ்க்கை ஏற்பாடுகள் வழக்கமான ஒன்றாக இல்லை என்றாலும், ஒரே வீட்டிற்குள் எப்படி தனித்தனியாக வாழ வேண்டும் என்பதை மாற்றி அமைத்ததன் பிறகும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தான் பலரையும் நெகிழ வைத்துள்ளது.