பாலத்துக்கு அடியில்.. துணி குவியலுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்.. ஸ்பாட்'ல போய் விசாரிச்ச போலீஸ்.. "அப்படியே கேஸ் ட்விஸ்ட் ஆயிடுச்சு.."
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவி காணாமல் போனதாக, கணவர் புகார் கொடுத்த நிலையில், இது தொடர்பாக விசாரித்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மணிமாறன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவியான மைதிலி, சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனது மனைவி மனதில் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை மணிமாறன் அளித்துள்ளார்.
வேலைக்கு சென்ற தனது மனைவி, வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் தனது புகாரில் மணிமாறன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் பாதையில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்திற்கு அடியில், பழைய துணிக் குவியலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக சம்பவம் இடம் வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கே பெண் ஒருவரின் சடலம், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதன் பின்னர், அந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த சடலம் மைதிலி தான் என்பதையும் போலீசார் உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, போலீசார் இதுபற்றி விசாரணையும் மேற்கொண்டு வந்தனர். கடைசியாக மைதிலியை பைக்கில் அழைத்து வீட்டிற்கு விட்டு சென்ற மைதிலியின் சக பணியாளர் ஜெய்சங்கர் என்பவரை போலீசார் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அப்போது, அவர் சொன்ன தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மைதிலி தன்னுடைய பைக்கில் லிப்ட் கேட்டு தன்னுடன் வந்ததாகவும், இதனைக் கண்ட மணிமாறன் ஆத்திரத்தில் தன்னையும், மைதிலியையும் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், மணிமாறனை அழைத்து போலீசார் விசாரிக்கவே, அவர் அதன் பின்னர் நடந்த சம்பவங்களை விளக்கினார்.
ஜெய்சங்கருடன் பைக்கில் மனைவி வந்ததால், அவரது நடத்தையில் தனக்கு சந்தேகம் வந்ததாகவும், மணலி அருகே உள்ள பாலத்தில் வைத்து, மனைவியுடன் இது பற்றி பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதில் வாக்குவாதம் உருவாகவே, இன்னும் ஆத்திரம் அடைந்த மணிமாறன், மனைவி மைதிலியை கொலை செய்து விட்டு, அங்கே உள்ள பழைய துணிகளுக்கு இடையில், மனைவியின் உடலை போட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், தனக்கு எதுவும் தெரியாதது போல இருந்த மணிமாறன், மனைவியை காணவில்லை என நாடகமாடி புகார் ஒன்றையும் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். தற்போது, அவரின் நாடகம் அனைத்தும் அம்பலமாகி போலீசாரிடமும் சிக்கி உள்ளார்.
Also Read | "மணமகன் விற்பனைக்கு?!.." 700 வருஷமா follow பண்ணும் சுவாரஸ்ய 'சடங்கு'.. வைரலாகும் மாப்பிள்ளை மார்க்கெட்!!