ஆண்மை குன்றியவர் என்பதை மறைத்து.. 200 பவுன் நகை வாங்கி திருமணம்.. பெண் அளித்த புகார்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவர் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து தனக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

Also Read | ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் “செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகள்”
உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இர்பானா ரஸ்வீன் என்ற பெண் ஒருவர், தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை சேர்க்க கோரி மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான புகாரை விசாரித்த அவர், மனுதாரர் இர்பானா ரஸ்வீனின் கணவர், ஆண்மை குன்றி இருந்ததை மறைத்து, திருமணமும் செய்து சுமார் 200 சவரன் நகை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக பெற்றுள்ளார்.
மேலும், கணவர் ஆண்மை குன்றியவர் என்பது திருமணத்திற்கு பின்பு தெரிய வந்த நிலையில், தலாக் முறையில் மனைவியை தலாக் முறையில், விவாகரத்து கூறிவிட்டு அமெரிக்காவுக்கும் அவர் சென்று விட்டார். இது தொடர்பாக மனுதாரர் இர்பானா ரஸ்வீன் அளித்த புகாரின் அடிப்படையில், சமூக நலத்துறை அலுவலகத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. மேலும், அதன் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இர்பானா ரஸ்வீனின் கணவர் மீது தவறு இருக்கும் நிலையில், அதனை மறைத்து திருமணம் செய்ததாக மனுதாரரின் கணவர் மீது 417, 420 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கையும் நீதிபதி முடித்து வைத்துள்ளார்.
ஆண்மை குன்றியவர் என்பதை மறைத்து, சுமார் 200 சவரன் நகை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கி விட்டு, ஏமாற்றிய கணவர் மீது பெண் அளித்த புகார், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
