"அய்யா, என் புருஷன காணோம்.." மனைவி அளித்த அதிர்ச்சி புகார்.. "குக்கர வெச்சு தான்.." PROFESSOR காணாம போன வழக்கில் திடுக்கிட வைத்த 'ட்விஸ்ட்'
முகப்பு > செய்திகள் > இந்தியாவிசாகப்பட்டினம் பகுதியில், பேராசிரியர் ஒருவர் காணாமல் போன வழக்கு தொடர்பாக விசாரித்து வந்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் காத்திருந்தது.

Also Read | ஆளே இல்லாத வீடு.. "அங்க இருந்த ஃப்ரிட்ஜ் கதவ தொறந்தப்போ.." அதிர்ந்த போலீசார்.. குலை நடுங்க வைத்த சம்பவம்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள மதுரவாடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, முரளிக்கும் மிருதுளா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் பணிபுரிந்து வரும் முரளி, ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் சொந்த ஊரான மதுரவாடாவுக்கு வந்து விட்டு செல்வது வழக்கம். அப்படி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த முரளி, திடீரென காணாமல் போனதாக அவரது மனைவி மிருதுளா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு நண்பர்களிடம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், இரண்டு நாட்களாகவும் காணவில்லை என புகாரளித்துள்ளார்.
மிருதுளா அளித்த புகாரின் பெயரில், போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது தனது மகன் காணாமல் போனது தொடர்பாக, மருமகள் மிருதுளா மீது சந்தேகம் இருப்பதாகவும் முரளியின் தாயார் குறிப்பிட்டுள்ளார். இதனால், முரளியின் மனைவி மிருதுளாவிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியானது.
அதாவது, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முரளி, ஆண்டுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், இதற்கு மத்தியில், மிருதுளாவுக்கு தன்னை விட வயது குறைந்த இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியிடங்களில் சுற்றியும், வீட்டில் தனிமையாக இருந்தும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, ஆண்டுக்கு ஒருமுறை வந்தாலும் தங்களின் உறவுக்கு தடையாக இருக்கும் முரளியை கொலை செய்யவும், அவரது மனைவி மிருதுளா மற்றும் அவரது காதலன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், கணவர் முரளி பிறகு உறங்கிய பிறகு, தனது காதலனை நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில் வீட்டுக்கு அழைத்துள்ளார் மிருதுளா. தொடர்ந்து, இருவரும் சேர்ந்து பிரஷர் குக்கர் மற்றும் தோசை பேன் ஆகியவற்றால் அடித்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணை தகவல்கள் குறிப்பிடுகிறது.
பின்னர், முரளியின் உடலை போர்வையில் போர்த்தி எடுத்து, அருகேயுள்ள பாலம் ஒன்றின் அடியில் வீசி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும் அங்கே சென்று முரளியின் உடலையும் தீ வைத்து எரித்துள்ளனர். இப்படி பலவிதமான நாடகங்களை செய்து விட்டு, கடைசியில் தனது கணவர் காணவில்லை என புகார் கொடுத்த மனைவி, தனது காதலுடன் பிடிபட்டுள்ள சம்மதம் சம்பவம் அப்பகுதியில் கடும் பரப்பு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Also Read | மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல வாந்தி.. "அம்மாடியோவ், இத்தனை கோடி ரூபா மதிப்பா இதுக்கு??.."

மற்ற செய்திகள்
