கடலில் ஜாலியாக குளியல் போட்ட மக்கள்.. "அவங்க பக்கத்துல ஏதோ ஒன்னு கருப்பா.." டிரோன் கேமராவில் சிக்கிய பரபரப்பு சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்புளோரிடா பகுதியில் உள்ள கடற்கரையில், சிலர் குளித்துக் கொண்டிருந்த வேளையில், எடுக்கப்பட்ட Drone காட்சி ஒன்று, பலரையும் பீதி அடைய செய்துள்ளது.

Also Read | "சுத்தி 128 பிளாட்'ல இவரு தான் ஒரே ஆளு.." தனியாக வாழும் முதியவர்.. "இப்போ பேய் நகரம் மாதிரி இருக்காம்.."
ராபர்ட் ரஸ் என்ற நபர் ஒருவர், தனது சகோதரருடன் புளோரிடா அருகே Daytona என்னும் கடற்கரை அருகே Drone கேமரா ஒன்றை பறக்க விட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், கடலுக்கு மேல் drone பறந்து கொண்டிருந்த போது, ஒரே ஒரு காட்சியைக் கண்டு, ராபர்ட் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார்.
இதற்கு காரணம், கடல் நீரில் சுறா மீன் ஒன்று நகர்ந்து கொண்டிருந்துள்ளது. இதில், அதிர்ச்சி ஆக காரணம் என்னவென்றால், சுறா மீனில் இருந்து ஒரு சில அடி தூரத்தில் பல பேர் நீந்தி கொண்டிருந்தது தான். சுறா மீன் ஒன்றை ராபர்ட் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அது அங்கே குளித்துக் கொண்டிருந்த மக்கள் அருகே சென்றதாகவும் கூறப்படுகிறது. அதில் இரண்டு பேர், அருகேயுள்ள சுறா மீனை பார்க்கவில்லை என்றாலும், தங்களுக்கு மேலே பறந்து கொண்டிருந்த டிரோனை கவனித்து, கை அசைக்கவும் செய்தனர்.
இது தொடர்பான சம்பவம் குறித்து, டிரோன் மூலம் படம் எடுத்த ராபர்ட் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதன்படி, "அந்த கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பல நபர்களை நோக்கி அந்த சுறா நீந்தி சென்றது. ஆனால், அவற்றின் இரை அவர்கள் இல்லை என்பது தெரிந்ததும், ஒவ்வொருவரிடம் இருந்து விலகிக் கொண்டே இருந்தது.
இதனை டிரோன் மூலம் பார்த்துக் கொண்டே இருந்தது சற்று பயமாக தான் இருந்தது. ஏனென்றால், இந்த பகுதியில் சுறா மீன்கள் சில நபர்களை கடித்துள்ளது. ஆனால், அவை தற்செயலாக தான் நடந்துள்ளது" என ராபர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா பகுதிகளில், இது போன்று சுறா மூலம் மனிதர்கள் தாக்கப்படுவது சமீப காலமாக நிறைய நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே வேளையில், டிரோன் கேமராவில் பதிவான காட்சிகளின் படி, தம்பதியை நெருங்கிய சுறா, blacktip வகையை சார்ந்த சுறா என்றும் கூறப்படுகிறது. மேலும், இது மனிதர்களை தாக்கும் ஒரு இனம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், மனிதர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் அவர்களை கடந்து சென்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பலரையும் அஞ்சி நடுங்க வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
