"அவர் யாருனு கண்டுபிடிங்க".. துபாய் இளவரசரயே தேட வச்ச இளைஞர்.. வெளிநாட்டுல இருந்து வந்ததும் இளவரசர் செஞ்ச நெகிழ வைக்கும் காரியம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் உணவு டெலிவரி ஊழியராக பணிபுரியும் இளைஞரை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார் துபாய் இளவரசர்.
ஷேக் ஹம்தான்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-ன் மூத்த மகன் தான் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம். இவர் துபாயின் பட்டத்து இளவரசராகவும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். பொதுமக்களிடத்தில் எப்போதும் அன்பாக பழக்கூடியவரான ஹம்தான் சமூக வலை தளங்களிலும் துடிப்புடன் இயங்க கூடியவர். சாகச பிரியரான இவர் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது ஏறி செல்பி எடுப்பது, ஆழ்கடலில் நீச்சலடித்து போன்றவற்றை செய்வது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களிலும் வெளியிடுவார். இதனாலேயே இவருக்கு பல மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.
இளவரசர் வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், ஷேக் ஹம்தான் கடந்த வாரத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் சாலை ஓரத்தில் நிற்கிறார். வாகன வரத்து நின்றவுடன், சாலை மையத்தில் கிடந்த இரு பெரிய கற்களை தூக்கிக்கொண்டு சாலை ஓரத்தில் போடுகிறார் அவர் அதன் பின்னர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் கிளம்புகிறார்.
இளவரசர் இந்த வீடியோவை பகிர்ந்து,"துபாயில் நற்செயல்கள் பாராட்டப்பட வேண்டும்" எனக்குறிப்பிட்டு அவரை கண்டுபிடித்துத்தரும்படி கோரிக்கையும் வைத்திருந்தார்.
The good man has been found. Thank you Abdul Ghafoor, you are one of a kind. We will meet soon! pic.twitter.com/ICtDmmfhyY
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) July 31, 2022
போன்கால்
இதைத் தொடர்ந்து அப்துல் கஃபூர் எனும் அந்த இளைஞரை அதிகாரிகள் கண்டுபிடிக்கவே அவருக்கு போன் மூலம் பாராட்டு தெரிவித்திருந்தார் ஷேக் ஹம்தான். மேலும், தற்போது தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் நாடு திரும்பியவுடன் அவரை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். பிரிட்டனுக்கு தனது தந்தையுடன் சென்றிருந்த ஹம்தான் துபாய் திரும்பிய உடன் அப்துலை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து ஷேக் ஹம்தான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"அப்துல் கஃபூரைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். பின்பற்றப்பட வேண்டிய உதாரணம் இவர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
An honor to meet you Abdul Ghafoor, a true example to be followed. pic.twitter.com/eRQ0nuYAZF
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) August 11, 2022
பாகிஸ்தானை சேர்ந்த அப்துலுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் துபாய் இளவரசர் தன்னை நேரில் வரவழைத்து பாராட்டியது வாழ்வில் மறக்க முடியாத தருணம் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read | செப்டம்பர் 26 ஆம் தேதி நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. உச்சகட்ட பரபரப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!