127 கிலோ 'வெயிட்'... சீனா 'சூப்னா' கொள்ளை இஷ்டம்... வடகொரிய அதிபர் குறித்து வெளியான 'புதிய' ரகசியங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய தலைவர் கிம் ஜாங் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மோசமாக இருப்பதாக பல்வேறு தகவல் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் அவரது உணவு முறை தான் அவரின் தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

36 வயதான கிம் ஜாங்கின் உடல் எடை 127 கிலோவாகும். இந்த உடல் எடையின் மூலம் அவரின் உடல்நிலை மோசமானதாக தெரிகிறது. அவர் தனது உணவு பழக்கத்தில் எந்தவித கட்டுப்பாடுகளையும் வைத்ததில்லை என கிம் ஜாங்கின் முன்னாள் சமையல் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், உணவுப்பிரியரான கிம், மாட்டுக்கறி, சீஸ் மற்றும் மது வகைகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கம் உடையவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான வடகொரிய மக்கள் ஒரு நாள் உணவுக்கே கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், கிம் ஜாங்கின் பெரும் ஆடம்பர உணவுமுறை பல்வேறு பத்திரிகைகளால் விமர்சிக்கப்பட்டிருந்தது. அதனை சிறிதளவும் பொருட்படுத்தாத கிம், சீனா பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுறாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சோப்புக்கு அடிமை என கூறப்படுகிறது.
