வேலை தேட போறேன்னு மனைவியை கொண்டு போய்.. பணத்துக்கு விற்பனை செய்த கொடூர கணவன்.. இளம்பெண்ணின் போன் காலால் நடுங்கிய குடும்பம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Nov 14, 2022 05:52 PM

ஒடிஷா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா என்னும் பகுதியை அடுத்த கிராமம் ஒன்றை சேர்ந்தவர் கிரா பெருக்.

Odisha man sells his wife to another man police found

Also Read | "தோனி சொல்லியும் யாரும் கேக்கல".. கடைசி ஓவர் முன்னாடி நடந்தது என்ன??.. வைரலாகும் சோயிப் மாலிக் கருத்து.. T 20 World Cup 2007!!

இவர் பவுர்ணமி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படும் நிலையில், பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடனும் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதனிடையே, கடந்த சில தினங்கள் முன்பாக மனைவியை அழைத்து கொண்டு டெல்லி சென்றுள்ளார் கிரா பெருக்.

வேலை தேடி செல்வதாக மனைவியை டெல்லிக்கு கிரா பெருக் அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், டெல்லி சென்ற பவுர்ணமி, தனது தந்தைக்கு கூறியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணத்திற்காக தனது மனைவியை வேறொரு நபருக்கு டெல்லியில் கிரா பெருக் திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கண்ணீர் மல்க மகள் சொன்ன தகவலை கேட்டு பவுர்ணமியின் தந்தை மற்றும் குடும்பத்தினர் கதி கலங்கி போயுள்ளனர். உடனடியாக இது குறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றை அவர்கள் அளித்துள்ளனர். அதே போல, டெல்லியில் மனைவியை விற்று விட்டு ஒடிஷா திரும்பி இருந்த கிரா பெருக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணம் நடந்த பிறகு, தனது மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவர் குறித்த செய்தி, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

Also Read | இளம்பெண்ணைக் கொன்று.. சமூக வலைத்தளத்தில் வீடியோ பகிர்ந்த வாலிபர்..!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!

Tags : #ODISHA #MAN #SELLS #WIFE #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Odisha man sells his wife to another man police found | India News.