"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. பேங்க்-அ கொள்ளை அடிச்சிட்டு வந்துடறேன்".. டாக்சி ட்ரைவரை அலறவிட்ட திருடன்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வங்கியை கொள்ளையடித்த நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள சவுத்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜேசன் கிறிஸ்மஸ். 42 வயதான ஜேசன் கடந்த 16 ஆம் தேதி வாடகை டாக்சியை புக் செய்திருக்கிறார். அதில் ஏறியவர் வங்கி ஒன்றுக்கு செல்லவேண்டும் என டிரைவரிடம் சொல்லியிருக்கிறார். அவரும் வங்கிக்கு தனது டாக்சியில் ஜேசனை அழைத்துச் சென்றிருக்கிறார்
வங்கி இருக்கும் பகுதியில் இறங்கியவுடன், காத்திருக்கும்படியும், உடனே வந்துவிடுவேன் எனவும் டிரைவரிடம் ஜேசன் சொல்லிவிட்டு வங்கியின் உள்ளே சென்றிருக்கிறார். சொன்னபடியே கொஞ்ச நேரத்தில் வெளியே வந்த ஜேசன், மீண்டும் தன்னை தனது வீட்டில் இறக்கிவிடும்படி சொல்லியிருக்கிறார்.
ஆனால், ஜேசன் வங்கியில் கொள்ளையடித்தது தெரியாமலேயே டிரைவர் அவரை டிராப் செய்திருக்கிறார். வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிககளை கொண்டு மிச்சிகன் போலீசார் ஜேசனை கைது செய்திருக்கின்றனர். அவருடைய உடையில் வித்தியாசமான சிவப்பு நிற, வர்ணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இதுகுறித்து விசாரணை செய்திருக்கின்றனர்.
ஒருவேளை ஜேசன் சுடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நினைத்திருந்த நிலையில், அது வெறும் பெயிண்ட் என்பது தெரிய வந்திருக்கிறது. ஜேசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட டாலர்களிலும் இந்த சிவப்பு நிறம் ஒட்டி இருந்திருக்கிறது. ஜேசனை பிடிக்க, அதே டாக்சி ட்ரைவர் காரணமாக இருந்திருக்கிறார்.
சிசிடிவி கேமராவில் ஜேசன் டாக்சியில் தப்பிச் சென்றதை அறிந்த போலீஸ் அதிகாரிகள், டாக்சியை கண்டுபிடித்து டிரைவரிடம் விசாரணையில் இறங்கும்போதுதான் விஷயமே அந்த டிரைவருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து ஜேசனை டிராப் செய்த இடத்தை டிரைவர் போலீசாருக்கு காட்டியிருக்கின்றார்.
இந்நிலையில், இதுபோன்ற ஒரு வழக்கை தாங்கள் சந்தித்ததில்லை என்கிறார்கள் மிச்சிகன் மாகாண போலீசார். இதனிடையே, ஜேசனுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read | "என் முதல் குழந்தை என் கையிலயே..."..எலான் மஸ்க்கின் சோக பக்கம்.. உருக்குலைய வைத்த ட்வீட்..

மற்ற செய்திகள்
