கண்ணிமைக்கும் நேரத்தில், மின்னல் வேகத்தில், 80 அடி தூரத்தில் பாய்ந்த கூடைப்பந்து.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 21, 2019 04:15 PM

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் கூடைப்பந்து போட்டிகள் பலராலும் தீவிரமாக விரும்பப்படுவது உண்டு.

basketball player Matt Millett nails 80-foot buzzer-beater

கிரிக்கெட் மற்றும்  கால்பந்து போட்டிகளுக்கு இணையாக கூடைப் பந்து போட்டிகளுக்கான சீசன்கள் வந்துவிட்டால் ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டத்தை காண முடியும். அந்த அளவுக்கு அந்த போட்டிகளுக்கு நிகரான ரசிகர்களின் பட்டாளம் கூடைப் பந்து போட்டிகளுக்கும் உண்டு.

ஆனால் எவ்வெப்போதாவது நடக்கும் அதிசய மேட்ச்களில் எவ்வெப்போதாவது நிகழும் அசாத்தியமான, விநோதமான சம்பவங்கள்தான் கூடைப்பந்து போட்டிகளை நம்மை கவனிக்க வைக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் நடந்த கூடைப்பந்து போட்டி ஒன்றில் 80 அடி தொலைவில் இருந்து எதிரணியின் கூடைக்குள் பந்தை சரியாக போட்டு, அமெரிக்க கூடைப்பந்து வீரர் மேட் மில்லட் வைரலாகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், சிறப்பு ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கனடா அணிக்கு எதிரான போட்டியில், அமெரிக்க அணி வீரர் மேட் மில்லட் சுமார் 80 அடி தூரத்தில் இருந்து கூடைக்கு எய்ம் செய்து பந்தை சரியாக கூடைக்குள் போட்டு அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் 35-18 என்கிற கணக்கில் அமெரிக்கா, கனடாவை வீழ்த்தியது.

Tags : #BASKETBALL #MATTMILLETT #BUZZER #BEATER #VIRALVIDEOS