‘இந்த அன்பு போதும் தலைவா’..ரசிகர்களுக்காக‘தல’எடுத்த ரிஸ்க்.. நெகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 22, 2019 08:22 PM

ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்குவதற்காக தடுப்பைத் தாண்டி தோனி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: Dhoni jumped up wall for meet the fans in chepauk

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பாத்துக் காத்திருக்கும் ஐபிஎல் டி20 லீக்கின் முதல் போட்டி நாளை(23.03.2019) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கோலகலமாக நடைபெற உள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு டிக்கெட் விற்பனை தொடங்கியது. சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட் விற்று உலகையே ஆச்சரியபட வைத்தது.

ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ள. இதற்காக நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.

இதற்கு முன்னதாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த பயிற்சி ஆட்டத்தைக் காண சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் கூடி உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தின் முடிவில் மைதானத்தில் இருந்த ரசிகர்களைக் காண தடுப்பைத் தாண்டி தோனி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL2019 #IPL #MSDHONI #WHISTLEPODU 💛🦁 #ANBUDEN #CSKVSRCB #VIRALVIDEOS #YELLOVE