ஆஹா! என்ன 'டேஸ்ட்டு' என்ன டேஸ்ட்டு... சீக்கிரம் 'கடிச்சிக்குடு' மேன்... செம வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்தங்கள் வாழ்வினை மேம்படுத்த உழைக்கும் மாடுகளை கொண்டாடுவதற்கென்றே மாட்டு பொங்கலை விவசாயிகள் வெகு கோலாகலமாக கொண்டாடுவர். அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்தில் மாலை போட்டு பொட்டு வைத்து பொங்கலை அவற்றுக்கு ஊட்டி விடுவர்.

இதான் சார் நாங்க, இதான் எங்க வாழ்க்கை 😍 pic.twitter.com/OhIho4oW6u
— Captain velu (@velutwitzzz) January 27, 2020
கிராமங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மாட்டு பொங்கல் மாடு இல்லாதவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏக்கத்தையே ஏற்படுத்தி விடும். அந்தளவுக்கு மாடுகளுடன் கொஞ்சிக்குலாவி அவற்றை குழந்தைகள் போல ஒவ்வொருவர் வீட்டிலும் போற்றி மகிழ்வர். அது எந்தளவு உண்மை என்பதை இந்த வீடியோ கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
அந்த வண்டியில் கரும்பு சாப்பிடும் வாலிபர் ஒருவர் தன்னுடைய அருகில் நின்றுகொண்டு வரும் காளை மாட்டிற்கு கரும்பினை கடித்துக்கடித்து ஊட்டுகிறார். கரும்பினை சாப்பிடும் அந்த காளை கரும்பின் சுவையில் மகிழ்ந்து மேலும் அந்த வாலிபரிடம் கரும்பைக்கேட்டு வாங்கி சாப்பிடுகிறது. பார்ப்பவர் மனதை நெகிழச்செய்யும் இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எக்கச்சக்க ஹார்ட்டுகளை குவித்து வருகிறது.
