'மொத்தமாக' 35 ஆயிரம் பேரை... வீட்டுக்கு அனுப்பும் 'முன்னணி' நிறுவனம்... கலக்கத்தில் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பின. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. ஐடி தொடங்கி சேவை நிறுவனங்கள் வரை இந்த பொருளாதார மந்தம் ஆட்டிப்படைத்தது.

இந்த நிலையில் பொருளாதார மந்தத்தின் தாக்கம் இந்த ஆண்டும் தொடர்கிறது. அந்த வகையில் உலகின் பிரபலமான ஹெச்எஸ்பிசி நிறுவனம் சுமார் 35 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வங்கிக்கு பெரும்பாலான வருவாய் ஆசிய நாடுகளில் இருந்துதான் வருகிறதாம். கடந்த 2019-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 20.3 பில்லியன் இருக்கும் என தரகு நிறுவனங்கள் கணித்தன. ஆனால் 13.5 பில்லியன் மட்டுமே லாபம் கிடைத்தது. கடந்த பல வருடங்களாக ஹெச்எஸ்பிசி வங்கியின் வியாபாரம் அமெரிக்காவில் தொடர்ந்து சரிந்து கொண்டு தான் இருக்கிறதாம்.
தற்போது அமெரிக்காவில் 224 வங்கிக் கிளைகள் உள்ளது. இதில் சுமாராக 30 சதவிகித கிளைகளை இழுத்து மூட இருக்கிறார்களாம். அதோடு இனி சர்வதேச மற்றும் பணம் இருக்கும் பெரிய வாடிக்கையாளர்களை மட்டுமே டார்கெட் செய்து வியாபாரம் செய்ய இருக்கிறார்களாம். இதனால் சிக்கன நடவடிக்கையாக அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 35 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த வங்கிக்கு உலகம் முழுவதும் சுமார் 2.35 லட்சம் பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
