'இதுவரை இல்லாத மாற்றம்!'.. கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!.. இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 21, 2020 08:17 PM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 705 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

india coronavirus covid19 recovery rate reaches a record high

இந்தியாவில் இதுவரை 18,601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 603 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 1,336 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் 4 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. மேலும், கடந்த 14 நாட்களில், 61 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 3,252 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 705 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

இதன் மூலம், கொரோனாவிலிருந்து குணமாகி வருவோரின் விகிதம் 17.48 விழுக்காடாக உயர்ந்துள்ளது.