'வெறுப்பின் உச்சம்' உலக நாடுகள் மத்தியில்... இந்தியாவுக்கு 'கெட்ட' பெயரை உண்டாக்க... பாகிஸ்தான் பார்த்த 'பயங்கர' வேலை!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் சூழ்நிலையிலும் இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திட, பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங் குற்றஞ்சாட்டி இருக்கிறார். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நோய்க்கிருமியைப் பரப்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் அளிக்கப்போவதில்லை எனவும் அவர் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். இந்தியா முழுவதும் இந்தத் தகவல் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக இந்தியா-அமீரக உறவில் விரிசல் விழுந்திருப்பதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பிரதமர் மோடி, ''ஒற்றுமையும் சகோதரத்துவமுமே நமது நடத்தையாக இருக்க வேண்டும், கோவிட்-19 சாதி, இனம், நிறம் எனப் பாகுபாடு பார்த்து வருவதில்லை" என தெரிவித்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையில் இந்திய பாதுகாப்பு மற்றும் உளவு பிரிவுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி மத்திய அரசிடம் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய சைபர் தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்து இருக்கிறது. இதற்குப்பின் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் கூறப்படுகிறது. தாங்கள் பாகிஸ்தானியர்கள் என்று காட்டிக்கொள்ளாமல், அரபு நாட்டவர்கள் போன்று வெறுப்பு கருத்துகள் தெரிவிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரதமர் மோடி குறித்து நெகட்டிவ் ஹேஷ்டேக்குகளுக்கு பின்னால் ஐ.எஸ்.ஐ இருக்கலாம் என்றும் இந்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன.
இதற்கு முன் காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370-ஐ நீக்கியபோதும், டெல்லி கலவரத்தின்போதும் இதுபோன்ற போலி ட்வீட்களை பாகிஸ்தான் பதிவிட்டது இந்திய உளவுத்துறையால் கண்டறியப்பட்டது. தற்போது மீண்டும் அதே பாணியை பாகிஸ்தான் கையில் எடுத்து இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திட முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
