‘கொரோனா 3-வது அலையை நெருங்கிட்டோம்’.. யாரை அதிகமாக தாக்கும்..? பிரதமர் அலுவலகத்துக்கு பறந்த அதிர்ச்சி ரிப்போர்ட்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா மூன்றாவது அலை தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
சீனாவின் வூகான் மாகணத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தற்போது பல இடங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இதில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. நேற்று ஒரு நாளில் 25,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு வசதிகளில் தட்டுப்பாடு நேரலாம் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். தற்போது இந்த தகவலை பிரதமர் அலுவலகத்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.