எங்க 'தல' தோனிய இப்படி பார்த்ததே இல்லையே...! தோனியின் புதிய 'மங்க்' அவதாரம்...! - வைரல் போட்டோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 'மங்க்' தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோற்றத்தை வெளிப்படுத்துவதில் தோனி எப்போதுமே முன்னோடியாக இருப்பார். அவர் ஒவ்வொருமுறையும் தனது தோற்றத்தில் செய்யும் மாற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெறுவதுண்டு.
இந்நிலையில், தற்போது, தோனியின் புதிய தோற்றமாக தலையை மொட்டை அடித்து கொண்டு, தாடியை ஃபுல் சேவ் செய்து மங்க் போல் ஆடை அணிந்து, மிகவும் சாந்தமான முகபாவத்துடன் வெளியிடப்பட்ட போட்டோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
MS Dhoni's new monk avatar leaves fans puzzled; picture goes viral. fans to guess the reason behind the same.#mahendrasinghdhoni pic.twitter.com/stWVUn4aZg
— Nandan Pratim Sharma Bordoloi 🇮🇳 (@NANDANPRATIM) March 14, 2021
தோனியின் இந்த புதிய லுக் பலருக்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் டி-20 போட்டி தொடர்பான விளம்பரத்திற்காக அவர் இந்த புதிய தோற்றத்தை போட்டதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
