'இவங்க' ஒரு 'ஃபேமஸ்' நடிகையாச்சே...! இவங்க 'ஃபோட்டோ' எப்படி என் 'மார்க் ஷீட்ல' வந்துச்சு...? - 'சன்னி லியோனை' தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சையான சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிகாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியலில், இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றிருந்தது.

பீகார் மாநிலத்தில் கடந்த 2019-ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது வெளிவந்த அந்த மதிப்பெண் பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மார்க் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. மதிப்பெண் பட்டியலில் தன்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகையின் புகைப்படம் இருந்ததைக் கண்டு அந்த மாணவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறிய பீகாரின் ஆளும் கட்சியான ஜனதா தளம் கட்சியின் தலைவர் குலாம் காஸ் கூறும் போது, 'அதிக எண்ணிக்கையிலான மதிப்பெண் பட்டியலை வெளியிடும் போது சிறு தவறுகள் நடந்துவிடுகின்றன. தவறுகள் விரைவில் சரிசெய்யப்படும்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
