இந்த 'சிரிப்புக்கு' பின்னால பெரிய 'வலி' இருக்கு...! 'இதயத்தை' கனக்க செய்யும் 'வேலம்மாள்' பாட்டியின் 'வேதனை' வாழ்க்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் முதல்வர் கொரோனா நிவாரண நிதி வாங்கி பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானவர் நாகர்கோயிலை சேர்ந்த வேலம்மாள் பாட்டி.

கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 மற்றும் 10-க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் அடங்கிய பை தொகுப்பையும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நாகர்கோவில் கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி வேலம்மாள் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு உச்சக்கட்ட சந்தோஷத்தில், பற்களே இல்லாத வாயால் சிரிக்கும்படி இருந்த புகைப்படம் சமூக வலைதளங்கள் வாயிலாக பரவி வைரலாகியது.
பட்டித்தொட்டியெங்கும் வைரலாகிய இந்த அழகிய புகைப்படத்தை எடுத்தவர் நாகர்கோவையிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி.
வைரலான வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு!' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கூறிய வேலம்மாள் பாட்டி, 'ரூ.2,000 கொடுத்த ஸ்டாலின் அய்யாவுக்கு நன்றி, வீடு இல்லை. வேலையும் இல்லை. மழை வந்தாலும் ஒதுங்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்' எனக் கூறியிருந்தார்.
இணையத்தில் வைரலாகிய இந்த பாட்டியின் அழகிய சிரித்த முகத்திற்கு பின்னால் வேதனையும் உள்ளது. வேலம்மாளுக்கு ஒரு மகளும், மகனும் இருந்தாலும் அவர்கள் பாட்டியை பார்த்துக் கொள்ளவில்லை. அதோடு, பூட்டிக் கிடக்கும் மகளின் வீட்டு முன்புள்ள திண்ணையில் தான் இந்த வேலம்மாள் பாட்டி வசித்து வருகிறார்.
அக்கம்பக்கத்தினர் அளிக்கும் உணவினை சாப்பிட்டுக்கொண்டு இந்த வயோதிக காலத்தில் திண்ணையில் வாழும் வாழ்க்கை இதயத்தை கனக்க செய்யும் வகையில் உள்ளது.

மற்ற செய்திகள்
