பாடிகார்ட் உடன் ரகசிய உறவு!.. கோடிகளை கொட்டிக் கொடுத்து... இளவரசி போட்ட அதிரடி கண்டிஷன்!.. பெரிய இடத்து மருமகள் செய்த பகீர் காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Nov 23, 2020 05:50 PM

தனிப் பாதுகாவலர் உடனான உறவை மறைப்பதற்காக துபாய் இளவரசி ஹாயா 1.2 மில்லியன் (ரூ.12 கோடி) டாலர்களுக்கும் மேலாக செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது.

dubai ruler wife princess haya bodyguard love affair gifts money

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் - மகோடமுக்கும், அவரின் ஆறாவது மனைவியான இளவரசி ஹாயா பின்ட் அல் ஹுசைனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு உலகறிந்த ஒன்று.

தன் கணவரிடமிருந்து விவகாரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்த ஹாயா திடீர் தலைமறைவானார்.

dubai ruler wife princess haya bodyguard love affair gifts money

ஜோர்டான் நாட்டை பிறப்பிடமாக கொண்ட ஹாயா, தஞ்சம் புகுந்தது லண்டனில். அங்குதான் தற்போது தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் ஹாயா தனது கணவர் துபாய் மன்னர் ஷேக் முகமதுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஷேக் முகமதுவால், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்றும், தன் 11 வயது மகளை சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு திருமணம் செய்துவைக்க ஷேக் முயல்கிறார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த வழக்கில் ஹாயாவுக்கு ஆதராகவே தீர்ப்பு வந்தது. இதற்கிடையே, இந்தக் காலகட்டத்தில் இளவரசி ஹாயா தனது தனிப் பாதுகாவலர் ஒருவருடன் உறவில் இருந்தது தெரியவந்துள்ளதாக 'டெய்லி மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.

                  dubai ruler wife princess haya bodyguard love affair gifts money

அந்தக் காவலர் பெயர் ரஸ்ஸல் ஃபிளவர். 2018-ல் துபாயில் இருந்து இளவரசி ஹாயா வெளியேறினாலும், 2016-ல் இருந்து ஹாயாவுக்கு தனிப் பாதுகாவலராக ரஸ்ஸல் இருந்து வந்துள்ளார்.

இளவரசி ஆஃப் வேல்ஸ் ராயல் ரெஜிமென்ட்டில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ரஸ்ஸல் 2016-ல் இருந்து ஹாயாவுக்கு முழுநேரப் பாதுகாவலராக இருந்து வருகிறார். அப்போது இருந்தே இருவருக்கும் பழக்கம் ஏற்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஸ்ஸல் தனது மனைவிக்கு தெரியாமல் ஹாயா உடன் உறவில் இருந்துள்ளார். இவர்களின் இருவர் விவரம் தெரியவர ரஸ்ஸல் மனைவி அவரை விவாகரத்து பெற்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

dubai ruler wife princess haya bodyguard love affair gifts money

இதற்கிடையே, தன்னுடன் உறவில் இருந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக ரஸ்ஸலுக்கு கோடிகளை இரைத்துள்ளார் என்கிறது இங்கிலாந்து ஊடகமான 'டெய்லி மெயில்'. ரூ.11.85 கோடி அளவில் பணம், பரிசுப்பொருட்களை கொடுத்துள்ளார் ஹாயா. ரஸ்ஸல் உடன் பணியாற்றிய காவலர்கள் இந்தத் தகவல்களை டெய்லி மெயில் உடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அதில், "பிரிட்டனைச் சேர்ந்த 37 வயதான காவலர் ரஸ்ஸல் ஃப்ளேவருடன் 46 வயதான இளவரசி ஹாயா இரண்டு வருட உறவில் இருந்துள்ளார். இதற்காக ஹாயா, ரஸ்ஸலுக்கு கோடிக்கணக்கில் பணம், 12 லட்சம் மதிப்புள்ள கடிகாரம் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கி போன்ற பரிசுப்பொருட்களை கொடுத்து இருக்கிறார்.

dubai ruler wife princess haya bodyguard love affair gifts money

மேலும் 'RU55ELLS' என்ற வார்த்தையுடன் தனிப்பயனாக்கப்பட்ட நம்பர் பிளேட் கொண்ட கார் ஒன்றையும் பரிசு அளித்துள்ளார். அவருக்கு மட்டுமல்ல, ரஸ்ஸலுடனான உறவைப் பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று ஹாயா மேலும் மூன்று காவலர்களுக்கு 1.2 மில்லியன் டாலர்கள் கொடுத்தார்" என்றும் ரஸ்ஸல் உடன் பணியாற்றியவர்கள் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dubai ruler wife princess haya bodyguard love affair gifts money | World News.