'மகன் பெரியவனாகிட்டானு சொல்லியும் திருந்தல'... 'எவ்ளோ பொறுத்தும் அன்னிக்கு பையன் முன்னாடியே'... 'கணவர் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தகாத உறவு தொடர்பாக பலமுறை எரிச்சரித்தும் மனைவி கேட்காததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கணவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தை சேர்ந்த தம்பதி ராமதாஸ் - லீலாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ராமதாஸ் மனைவியை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இருப்பினும் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று தாய் லீலாவதி இளைஞர் ஒருவருடன் இருந்ததை ராமதாஸின் மகன் பார்த்து தந்தையிடம் கூறியுள்ளார்.
அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராமதாஸ் லீலாவதியிடம் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அவர் லீலாவதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்த அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதில் அவர், "நான் குடும்ப தகராறு காரணமாக என் மனைவியைப் பிரிந்து 3 ஆண்டுகளாக மகனுடன் வாழ்ந்து வருகிறேன். என் மனைவியிடம் அவருடைய தகாத உறவு குறித்து பலமுறை எச்சரித்துள்ளேன். மகன் பெரியவனாகிவிட்டான். இனி அவனுக்காகவாவது திருந்த வேண்டுமென நான் கூறியும் அவர் திருந்தவில்லை. முன்னதாக அக்கம்பக்கத்தினர் வந்து சொன்னபோது கூட பொறுமையாக இருந்தேன். ஆனால், மகனே பார்த்துவிட்டுக் கூறும்படி நடந்துகொண்டதாலேயே ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டேன்" எனக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லீலாவதியுடன் கடைசியாக இருந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
