"'சிஎஸ்கே'க்கு 'ரெய்னா' போனா என்ன??.." அதான் 'பஞ்சாப்'க்கு 'ரியானா' கெடச்சுட்டாங்களே.." மீண்டும் வைரலாகும் 'சூப்பர்' ஓவர் 'GIRL'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, ஐபிஎல் போட்டிகளிலேயே மிக சிறந்த போட்டியாக கருதப்பட்டது.

காரணம், அந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றது. 20 ஓவரில் ஆட்டம் டிரா ஆன நிலையில், முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக, மீண்டும் சூப்பர் ஓவர் நடைபெற்ற நிலையில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த பரபரப்பான சூப்பர் ஓவர்களுக்கு நடுவே, பரபரப்பாக தோன்றிய இளம்பெண் ஒருவரின் புகைப்படம் மிகவும் வைரலானது. அந்த பெண் யார் என்பதை நெட்டிசன்கள் மிகத் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் துபாயைச் சேர்ந்த ரியானா லால்வானி (Riana Lalwani) என்பது தெரிய வந்தது.
போட்டி முடியும் தருவாயில் சூப்பர் ஓவர்களுடன் அந்த இளம்பெண்ணும் வைரலானார். அந்த இளம்பெண் பஞ்சாப் அணிக்கு ஆதரவாக இருந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் பெயரில் பல போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இளம்பெண்ணின் ஒரிஜினல் இன்ஸ்டா ஐடி குறித்த தகவலும் கிடைத்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னை குறித்து வைரலாக மீம்ஸ்கள் பலவற்றை அந்த இளம்பெண் பகிர்ந்துள்ளார். அந்த பதிவுகளும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
