VIDEO : "அடேங்கப்பா,, இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே..." பிறக்கப் போகும் 'குழந்தை'யின் பாலினத்தை அறிவிக்க... வேற லெவல் 'ஐடியா'... ஹிட்டடிக்கும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டங்களில் தங்களது குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவிக்க பெற்றோர்கள் பல விதமான புதுமையான வழிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
ஆனால், இது அனைத்தையும் விட துபாயை சேர்ந்த தம்பதிகளான அனஸ் (Anas) மற்றும் அசலா மர்வா (Asala Marwah) ஆகியோர் தங்களது இரண்டாவது குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிவிக்கும் வழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதாவது, உலகின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணைதளங்களில் அதிகம் ஹிட்டடித்து வருகின்றது. அந்த வீடியோவில், வண்ணமயமாக ஒளி மின்னும் புர்ஜ் கலிஃபா டவரில் குழந்தை சத்தத்துடன் கவுண்டவுண் ஆரம்பிக்கப்படுகிறது. இறுதியாக, அடுத்த குழந்தை ஆண் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
'நாங்கள் ஏதேனும் புதுமையாகவும், அதே நேரத்தில் வருங்காலத்தில் மிகவும் அழகான தருணமாக இருக்க வேண்டும் என முடிவு செய்து இதனை செயல்படுத்தினோம்' என அந்த தம்பதியர் தெரிவித்தனர். இன்ஸ்டாக்ராமில் இந்த வீடியோ சுமார் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், அவர்களின் யூ டியூப் பக்கத்தில் சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பல நெட்டிசன்கள் இந்த சம்பவத்தால் ஆச்சர்யத்தில் உறைந்து போன நிலையில், சிலர் இது தேவையில்லாத வேலை என அந்த தம்பதியரை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
இந்த விளம்பரத்திற்கு வேண்டி, இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.