'55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்55 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படுவது பற்றி துபாய் அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மக்கள் தொகையில் சுமார் 90% வெளிநாட்டவர் கொண்ட துபாயில் கொரோனா பாதிப்பு காரணமாக வேலை, வருமானம் இழந்து சொந்த ஊருக்குத் திரும்ப வெளியூர் அல்லது பிற நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த சிக்கல்களுக்கு முறையாக தீர்வளிக்கும் விதமாகவும், வெளிநாட்டவர்களின் உள்நாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும், புதிய திட்டங்களை அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் வரை மாத சம்பளம் உள்ளவர்கள், 2 கோடி ரூபாய் சேமிப்பு வைத்துள்ளவர்கள், துபாயில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளவர்கள் உள்ளிட்டோருக்கு சில நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் 5 ஆண்டுகள் புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படும் என்று துபாய் அரசு அறிவித்துள்ளது

மற்ற செய்திகள்
