‘இப்டியே நீங்க’...!! ‘தன் முன்னாள் அணிக்கு’...! ‘வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய’...! ‘முன்னாள் அதிரடி துவக்க வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்சை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக் வித்தியாசமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முதல் முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் இந்த சீசனில் நுழைந்துள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி அணி மோதவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர ஷேவாக், தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல இறுதிப்போட்டிகளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சந்திக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் ஐபிஎல்லில் இதே அணிக்காக டெல்லி டேர்டெவில்ஸாக இருந்தபோது விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஐபிஎல் 2020 தொடரில், புள்ளிப் பட்டியலில் 4-ம் இடம்பிடித்த பெங்களூரு அணி, பிளே ஆஃப் நாக்அவுட் போட்டியில் ஐதராபாத்திடம் தோற்று வெளியேறியது. இதனால், பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை நீக்க வேண்டுமென கூறினார் கம்பீர். ஆனால் சேவாக் கூறியுள்ளதாவது, ‘இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் விராத் கோலி.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடித் தருகிறார். எனவே, இந்த அடிப்படையில் பார்க்கையில், ஐபிஎல் தொடரில், அவருக்கு சரியான அணி அமையவில்லை என்றே அர்த்தம். கேப்டனை மாற்றிவிட்டால் மட்டும் கோப்பை கிடைத்துவிடுமா என்ன? அதனால் கேப்டனை மாற்றுவது குறித்து யோசிக்காமல் அணியை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவது குறித்து யோசிப்பதே பயனளிக்கும்’ என்று சேவாக் கூறியுள்ளார்.
Congratulations #DelhiCapitals on reaching the finals. The only active IPL team to have not ever played a final makes it to the final. 2020... Aur bahut kuch dikhayega.#DCvSRH pic.twitter.com/M80Mth8B8J
— Virender Sehwag (@virendersehwag) November 8, 2020

மற்ற செய்திகள்
