இன்னும் 5 நாள்தான்.. ரோஹித் மட்டுமில்ல அவரும்தான்.. ‘செக்’ வைத்த ரவிசாஸ்திரி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோஹித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா ஆஸ்திரிலேயா டெஸ்ட் தொடரில் விளையாடுவது தொடர்பாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவி வருவதால் இந்திய வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனில் இருந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரோகித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. ஆனால் இருவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உடல்தகுதி பயிற்சியை இருவரும் மேற்கொண்டு வருகின்றனர். உடற்தகுதி பெற்றுவிட்டால் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுவிடுவார்கள். ஆனால் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் இருவரும் ஆஸ்திரேலியா புறப்படவில்லை என்றால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த ரவிசாஸ்திரி, ‘பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர்கள் இருவரும் சில பரிசோதனைகளுக்காக சென்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு நாட்கள் இடைவெளி தேவை என்பது பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே தெரியவரும். ரோஹித் ஷர்மா அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால் அது கடினமானதாகிவிடும். ஏனென்றால், கோரன்டைன் இருக்கிறது. அப்படி இருக்கையில் அவர்கள் டெஸ்ட் போட்டிகள் தொடங்கும்போது வந்தால் அது உண்மையிலேயே கஷ்டமாகிவிடும்’ என அவர் தெரிவித்துள்ளார்.