'டிசம்பர் மாதம் மேற்கில் தொடங்கி ' கொரோனா வைரஸை ... முன்பே 'கணித்த' ஆற்காடு பஞ்சாங்கம்... எப்போ 'முடியும்'னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்பே கணித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 100 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த செய்தியை ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்பே கணித்திருக்கும் செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அதில் டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வைரஸ் நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே சீனாவில் கொரோனா உருவாகி உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் இந்த வைரஸ் நோய் ஏப்ரல் 14-ம் தேதி முதல் கட்டுக்குள் வந்து ஜூன் மாதம் முற்றிலும் குணமடைந்து விடும் என, ஆற்காடு சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் தெரிவித்து இருக்கிறார்.
