‘கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறையவே இருக்கு’.. ‘அணிக்காக சதம் அடித்துவிட்டு’ கொரோனாவால் சொந்த நாட்டுக்கு திரும்பும் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று உண்டாகி, பரவி மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், 99 சதவீத விளையாட்டுத் தொடர்கள் உலகம் முழுவதுமே தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டித் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டதால், எப்படியாவது இப்போட்டித் தொட்டரை முடித்துவிட வேண்டும் என பாகிஸ்தான் நினைக்கிறது. எனினும் ரசிகர்கள் இல்லாமல் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் பெரும்பாலான வீரர்கள் தத்தம் சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர். அவ்வாறு திரும்பியபோதிலும் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் லின் நேற்றைய ஆட்டத்தில் கலந்துகொண்டு சதம் அடித்தார்.
இதனால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து, தனது சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு கிறிஸ் லின் முடிவு செய்தார். இதனை அடுத்து, ‘கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறையவே இருக்கின்றன’ என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தான் சொந்த நாட்டுக்கு திரும்புவதை கிறிஸ் உறுதி செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய கிறிஸ் லின், ‘எனது ஒட்டுமொத்த நேரத்தையும் மகிழ்ச்சியாக கழித்தேன். துரதிர்ஷ்ட வசமாக இப்படி சூழ்நிலையில் சொந்த நாடு திரும்புகிறேன். ஆனாலும் கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறையவே இருக்கிறது என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
