'இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்ததே இல்ல...' 'காம்பயரிங் பண்ணதும் அவங்கதான்...' கொரோனா வைரஸ் காரணமாக ஆடியன்ஸ் யாரும் இல்லாமல் நடந்த ஸ்மாக் டவுன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Mar 16, 2020 01:06 PM

கொரோனா வைரஸ் தாக்கத்தால் WWE வரலாற்றில் முதல் முறையாக பார்வையாளர்கள் யாருமே  இல்லாமல் காலியான அரங்கில் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சி நடைபெற்றது.

Smackdown that took place without visitors in the arena

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் இதுவரை 5,764 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டென்மார்க் நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்த அதிபர் டிரம்ப், தானும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

அமெரிக்காவில் WWE நெட் வொர்க் சார்பில் பொழுதுபோக்கு குத்து சண்டை நிகழ்ச்சி நடத்தி வருகின்றது. இதற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே WWE நெட் வொர்க் நடத்தும் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சி வழக்கம் போல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கொரோனா அச்சம் காரணமாக WWE வரலாற்றில் முதல் முறையாக ஸ்மாக்டவுன் நிகழ்ச்சி எவ்வித பார்வையாளர்களும் இல்லாமல் நடைபெற்றது.

WWE வீரர்கள் மட்டுமே காம்பைரிங் செய்து அதை கேமரா கொண்டு பதிவு செய்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு விளையாடிவிட்டு சென்றனர்.

Tags : #WWE #CORONAVIRUS